
கௌரவ ஆளுநர் வடக்கு மாகாணம்
இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுகிறது. பல்வேறுபட்ட சூழல் கட்டமைப்புகளுடன், இயற்கை மற்றும் கலாசார புகழ்பெற்ற இடமாக யாழ்ப்பாணம் திகழ்கின்றது. இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்களில் கசூரினா கடற்கரையும் ஒன்றாகும். அத்துடன் நயினாதீவு, கீரிமலை, நிலாவரை கிணறு போன்ற பசுமையான இடங்களும் சுற்றுலாவிற்கு ஏற்ற இரம்மியமான சூழல் கட்டமைப்பை கொண்டுள்ளது. அமைதியான கலப்புகள், இயற்கை சுற்றுலா இடங்கள், பனைமரக் காடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இயற்கையையும், பாரம்பரியத்தையும் ஒன்றிணைத்த கலவையாக யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றமையால் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது.