நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்
இலங்கையின் வடக்கே, இந்து சமுத்திரத்தில் காணப்படும் நயினாதீவில் நாகபூசணி தாயாக அம்பிகை எழுந்தருளியிருக்கும் ஆலயமே நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் ஆகும். இது மிகப் பழமையானதும் வரலாற்று சிறப்புமிக்க சக்தி பீடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
1620 ஆம் ஆண்டு போர்த்துகீசர்களால் புராதன ஆலயம் இடித்தழிக்கப்பட்ட பின்னர் 1720 ஆம் ஆண்டு முதல் 1790 ஆண்டு வரை தற்போதைய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இக்கோயிலுக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுடன், திருவிழா மற்றும் விசேட பூஜை காலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் அம்பிகையின் ஆலயத்தை சென்றடைவர்.
தமிழ் மாதமான ஆனியில் 16 நாட்கள் அம்பிகையின் வருடாந்த மகோற்சவம் நடைபெறும். இவ்விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்வர். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் சுமார் சிற்பங்கள் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நான்கு கோபுரங்களை கொண்டமைந்துள்ளது.