நயினாதீவு விகாரை
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள தீவுகளில் ஒன்றாகிய நயினாதீவில் காணப்படும் பழமைவாய்ந்த பௌத்த வழிபாட்டு தலமாக நயினாதீவு விகாரை காணப்படுகின்றது.
நாட்டிலுள்ள பதினாறு பௌத்த புனித தலங்களுள் (சோலோஸ்மஸ்தான) இதுவும் ஒன்றாகும். கௌதம புத்த பகவான் ஞானம் பெற்று ஐந்து ஆண்டுகளின் பின்னர், நாக அரசர்களான சூலோதர மற்றும் மஹோதரா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சையை தீர்ப்பதற்காக, நயினாதீவை வந்தடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
பிற்காலப்பகுதியில் தேவநம்பியதிஸ்ஸ மற்றும் துட்டுகெமுனு ஆகிய மன்னர்களினால் நயினாதீவு விகாரை புனரமைக்கப்பட்டு, புனித இடமாக அறிவிக்கப்பட்டது.