நல்லூர் கந்தசுவாமி கோவில்
இலங்கை திருநாட்டின் வடபுலத்தில் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில், நல்லூர் கந்தசுவாமி கோவில் சிறப்பிடம் பெறுகின்றது. ஆறுமுகக் கடவுள் வேல் வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலம் இதுவாகும்.
இந்த ஆலயம் 948 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதுடன், 15 ஆம் நூற்றாண்டில் கோட்டை அரசரான ஆறாம் புவனேகபாகுவால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறுகள் சான்றுபகர்கின்றன.
நல்லூர் மண்ணின் பெரும் கோட்டையாக காட்சியளிக்கும் இக்கோயிலில் மூன்று கோபுரங்கள் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன. அத்துடன் ஆறு மணிக் கோபுரங்களுடன், கோட்டை மதில்கள் சூழ நல்லூர் கந்தசுவாமி கோவில் காட்சியளிக்கிறது. வருடாந்த உற்சவம் இருபத்தைந்து (25) நாட்கள் நடைபெறும். விசேட யாக பூஜைகளும், அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளும் இடம்பெறும்.
வருடாந்த உற்சவத்தில் மஞ்சம், கைலாசவாகனம், வெள்ளிவிமானம், தண்டாயுதபாணி உற்சவம், சப்பரம், தேர், தீர்த்தம், திருக்கல்யாணம் போன்ற உற்சவங்களில் அடியார்கள் தவறாது கலந்துக் கொள்வர்.